MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.40 திருப்பிரமபுரம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    426 எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
    தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
    கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
    வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே. 01
    427 தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
    காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
    ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
    காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே. 02
    428 நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
    உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
    அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
    பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே. 03
    429 சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
    கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
    தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
    நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே. 04
    430 கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
    பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
    விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
    எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. 05
    431 எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
    கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
    கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
    சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே. 06
    432 சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
    இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
    அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
    நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. 07
    433 எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
    நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
    உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
    தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே. 08
    434 கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
    அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
    தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
    உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே. 09
    435 உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
    முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
    பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
    சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே. 10
    436 தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
    கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
    முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
    பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே. 11

    திருச்சிற்றம்பலம்