MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    502 மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். 01
    503 மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
    துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். 02
    504 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
    துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
    தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். 03
    505 ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
    கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். 04
    506 மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
    தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். 05
    507 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
    கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    அடலானே றூரும் அடிக ளடிபரவி
    நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். 06
    508 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
    கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
    ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். 07
    509 தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
    கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
    கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். 08
    510 நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
    உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
    கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
    பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். 09
    511 உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
    இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். 10
    512 கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
    ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
    வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே. 11
    இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை.
    திருச்சிற்றம்பலம்