MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.49 சீகாழி
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    524 பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
    பாடி யாடிய வோசை நாடொறும்
    கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
    பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
    மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
    அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே. 01
    525 மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
    மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
    கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
    வண்ட லம்பிய கொன்றை யானடி
    வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
    விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே. 02
    526 நாடெ லாமொளி யெய்த நல்லவர்
    நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
    காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி
    தோடு லாவிய காது ளாய்சுரி
    சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
    வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே. 03
    527 மையி னார்பொழில் சூழ நீழலில்
    வாச மார்மது மல்க நாடொறுங்
    கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
    ஐய னேயர னேயென் றாதரித்
    தோதி நீதியு ளேநி னைப்பவர்
    உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே. 04
    528 மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
    வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
    கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
    வலிய காலனை வீட்டி மாணிதன்
    இன்னு யிரளித் தானை வாழ்த்திட
    மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே. 05
    529 மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
    வானு ளோர்களும் வந்து வைகலுங்
    கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
    நெற்றி மேலமர் கண்ணி னானைநி
    னைந்தி ருந்திசை பாடுவார் வினை
    செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே. 06
    530 தான லம்புரை வேதி யரொடு
    தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
    கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
    ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
    வாகி நின்றவொ ருவனே யென்றென்
    றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே. 07
    531 மைத்த வண்டெழு சோலை யாலைகள்
    சாலி சேர்வய லார வைகலுங்
    கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
    அத்த னேயர னேய ரக்கனை
    யன்ற டர்த்துகந் தாயு னகழல்
    பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே. 08
    532 பரும ராமொடு தெங்கு பைங்கத
    லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
    கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி
    திருவின் நாயக னாய மாலொடு
    செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
    இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே. 09
    533 பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
    யாது வண்டுகி லாடை போர்த்தவர்
    கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
    தொண்டை வாயுமை யோடுங் கூடிய
    வேடனே சுட லைப்பொ டியணி
    அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே. 10
    534 பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
    உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
    கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
    நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
    ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
    உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே. 11

    திருச்சிற்றம்பலம்