MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.50 திருஆமாத்தூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    535 குன்ற வார்சிலை நாண ராவரி
    வாளி கூரெரி காற்றின் மும்மதில்
    வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே
    தென்ற லார்மணி மாட மாளிகை
    சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்
    அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே. 01
    536 பரவி வானவர் தான வர்பல
    ருங்க லங்கிட வந்த கார்விடம்
    வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே
    கரவின் மாமணி பொன்கொ ழித்திழி
    சந்து காரகில் தந்து பம்பைநீர்
    அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே. 02
    பம்பை என்பது ஒரு நதி.
    537 நீண்ட வார்சடை தாழ நேரிழை
    பாட நீறுமெய் பூசி மாலயன்
    மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்
    பூண்ட கேழல்ம ருப்பரா விரி
    கொன்றை வாளரி யாமை பூணென
    ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே. 03
    538 சேலின் நேரன கண்ணி வெண்ணகை
    மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்
    தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்
    பாலின் நேர்மொழி மங்கை மார்நட
    மாடி யின்னிசை பாட நீள்பதி
    ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே. 04
    539 தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்
    தூவி நின்கழ லேத்து வாரவர்
    உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்
    வண்ட லார்கழ னிக்க லந்தும
    லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்
    அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே. 05
    540 ஓதி யாரண மாய நுண்பொருள்
    அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி
    நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்
    சோதியே சுடரே சுரும் பமர்
    கொன்றை யாய்திரு நின்றி யூருறை
    ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே. 06
    541 மங்கை வாணுதன் மான்ம னத்திடை
    வாடி யூடம ணங்க மழ்சடைக்
    கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்
    பங்க யமது வுண்டு வண்டிசை
    பாட மாமயி லாட விண்முழ
    வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே. 07
    542 நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை
    யாத வண்ணம்நி னைந்து ளத்திடை
    வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்
    குன்றெ டுத்தநி சாசரன் திரள்
    தோளி ருபது தான் நெரிதர
    அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 08
    543 செய்ய தாமரை மேலி ருந்தவ
    னோடு மாலடி தேட நீண்முடி
    வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்
    தைய லாளொடு பிச்சைக் கிச்சைத
    யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்
    டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே. 09
    544 புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி
    நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி
    பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்
    முத்தை வென்ற முறுவ லாளுமை
    பங்க னென்றிமை யோர் பரவிடும்
    அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே. 10
    545 வாடல் வெண்டலை மாலை யார்த்தும
    யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்
    ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்
    கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்
    கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்
    பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே. 11
    ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும்,
    ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.
    திருச்சிற்றம்பலம்