MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.52 திருக்கோட்டாறு
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    557 கருந்த டங்கண்ணின் மாத ராரிசை
    செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில்
    குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
    இருந்த எம்பெரு மானை யுள்கி
    இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்
    வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே. 01
    558 நின்று மேய்ந்து நினைந்து மாகரி
    நீரொ டும்மலர் வேண்டி வான்மழை
    குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்
    என்றும் மன்னிய எம்பிரான் கழ
    லேத்தி வானர சாள வல்லவர்
    பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே. 02
    559 விரவி நாளும் விழாவி டைப்பொலி
    தொண்டர் வந்து வியந்து பண்செயக்
    குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்
    அரவ நீள்சடை யானை யுள்கிநின்
    றாத ரித்துமுன் அன்பு செய்தடி
    பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே. 03
    560 அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்
    ஆட கம்பெறு மாட மாளிகைக்
    கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்
    நம்பனே நடனே நலந் திகழ்
    நாதனே யென்று காதல் செய்தவர்
    தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே. 04
    561 பழைய தம்மடி யார்துதி செயப்
    பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்
    குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்
    கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக்
    கானி டைக்கண மேத்த ஆடிய
    அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே. 05
    562 பஞ்சின் மெல்லடி மாத ராடவர்
    பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்
    கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்
    மஞ்ச னேமணி யேமணி மிடற்
    றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்
    துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே. 06
    563 கலவ மாமயி லாளொர் பங்கனைக்
    கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை
    குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
    நிலவ மாமதி சேர்ச டையுடை
    நின்ம லாவென வுன்னு வாரவர்
    உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே. 07
    564 வண்ட லார்வயற் சாலி யாலைவ
    ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை
    கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்
    தொண்டெ லாந்துதி செய்ய நின்ற
    தொழில னேகழ லால ரக்கனை
    மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே. 08
    565 கருதி வந்தடி யார்தொ ழுதெழக்
    கண்ண னோடயன் தேட ஆனையின்
    குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
    விருதி னான்மட மாதும் நீயும்வி
    யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்
    ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே. 09
    566 உடையி லாதுலழ் கின்ற குண்டரும்
    ஊணருந் தவத் தாய சாக்கியர்
    கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்
    படையி லார்மழு வேந்தி யாடிய
    பண்ப னேயிவ ரென்கொ லோநுனை
    அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே. 10
    567 கால னைக்கழ லாலு தைத்தொரு
    காம னைக்கன லாகச் சீறிமெய்
    கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
    மூல னைமுடி வொன் றிலாதவெம்
    முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய
    மாலைபத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
    திருச்சிற்றம்பலம்