MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.54 திருப்புகலி
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    579 உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
    கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
    பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
    திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 01
    580 நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
    ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
    போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
    சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 02
    581 அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
    மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
    பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
    எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே. 03
    582 கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
    மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
    பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
    எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே. 04
    583 நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
    பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
    பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி
    தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 05
    584 மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
    பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
    விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
    கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே. 06
    585 களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
    அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
    தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
    ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே. 07
    586 பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
    டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
    புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி
    வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 08
    587 சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
    கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
    புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
    நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே. 09
    588 நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
    கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்
    பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
    வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 10
    589 ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
    அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
    செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
    எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே. 11

    திருச்சிற்றம்பலம்