MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.57 திருநல்லூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    612 பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்
    பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
    திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
    மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 01
    613 அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்
    கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்
    சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்
    மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 02
    614 குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்
    பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்
    சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
    மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 03
    615 கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்
    மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்
    தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
    வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 04
    616 நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்
    அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்
    திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
    மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 05
    617 கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
    வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்
    தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
    ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே. 06
    618 ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண
    மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்
    தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
    வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 07
    619 காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
    மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
    தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
    மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 08
    620 போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது
    நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்
    தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்
    மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே. 09
    621 பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
    றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
    நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
    மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே. 10
    622 கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்
    செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
    பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்
    சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே. 11

    திருச்சிற்றம்பலம்