MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.64 திருமுதுகுன்றம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    688 தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
    ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
    ஓவா உவரி கொள்ள உயர்ந்தா யென்றேத்தி
    மூவா முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றே. 01
    689 எந்தை யிவனென் றிரவி முதலா இறைஞ்சுவார்
    சிந்தை யுள்ளே கோயி லாகத் திகழ்வானை
    மந்தி யேறி யினமா மலர்கள் பலகொண்டு
    முந்தித் தொழுது வணங்குங் கோயில் முதுகுன்றே. 02
    690 நீடு மலரும் புனலுங் கொண்டு நிரந்தரந்
    தேடும் அடியார் சிந்தை யுள்ளே திகழ்வானைப்
    பாடுங் குயிலின் அயலே கிள்ளை பயின்றேத்த
    மூடுஞ் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே. 03
    691 தெரிந்த அடியார் சிவனே யென்று திசைதோறுங்
    குருந்த மலருங் குரவின் அலருங் கொண்டேந்தி
    இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்துஞ்சீர்
    முரிந்து மேகந் தவழுஞ் சோலை முதுகுன்றே. 04
    692 வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தஞ்
    சித்தம் நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
    கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்தும்
    முத்தா றுடைய முதல்வர் கோயில் முதுகுன்றே. 05
    693 வம்பார் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
    நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
    கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
    மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே. 06
    இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
    694 வாசங் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
    நாசஞ் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்
    பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்தேத்த
    மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே. 08
    695 அல்லி மலர்மேல் அயனும் அரவின் அணையானுஞ்
    சொல்லிப் பரவித் தொடர வொண்ணாச் சோதியூர்
    கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
    முல்லை யயலே முறுவல் செய்யும் முதுகுன்றே. 09
    696 கருகும் உடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
    றுருகு சிந்தை யில்லார்க் கயலான் உறைகோயில்
    திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
    முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே. 10
    697 அறையார் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
    முறையால் முனிவர் வணங்குங் கோயில் முதுகுன்றைக்
    குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
    பிறையார் சடையெம் பெருமான் கழல்கள் பிரியாரே. 11

    திருச்சிற்றம்பலம்