MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.65 திருப்பிரமபுரம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    698 கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
    மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
    பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
    பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 01
    699 கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
    ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்
    தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்
    பேரும் பலவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 02
    700 சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
    கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
    மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்
    பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 03
    701 நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
    கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்
    மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
    பிச்சை இரந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 04
    702 தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
    ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
    ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
    பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. 05
    703 விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
    அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
    வண்ண எலும்பினொ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
    பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம புரம்அமர்ந் தாரே. 06
    704 பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
    கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
    துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
    பின்றியும் பீடும் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. 07
    705 பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
    அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
    புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
    பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரம்அமர்ந் தாரே. 08
    706 அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
    கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
    படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
    பிடிநடை மாதர் பெருகும் பிரம புரம்அமர்ந் தாரே. 09
    707 வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
    அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்
    உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்
    பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே. 10
    708 பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய
    அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
    நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
    விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே. 11

    திருச்சிற்றம்பலம்