MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    799 பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
    குறைவிலாப் புகலி பூமேல்
    மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
    பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
    சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
    புகழ்ச்சண்பை காழி கொச்சை
    காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
    கழுமலம்நாங் கருது மூரே. 01
    800 கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்
    தோணிபுரம் கனக மாட
    உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
    யுலகாருங் கொச்சை காழி
    திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
    செங்கமலத் தயனூர் தெய்வத்
    தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
    முடியண்ணல் தங்கு மூரே. 02
    801 ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
    யொளிமருவு காழி கொச்சை
    கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
    தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்
    சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப்
    புறவம்அய னூர்பூங் கற்பத்
    தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
    குருக்கங்கை தரித்தோ னூரே. 03
    802 தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
    தோணிபுரந் தரியா ரிஞ்சி
    எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
    தராய்புகலி யிமையோர் கோனூர்
    தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
    சண்பைசெழு மறைக ளெல்லாம்
    விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
    னூருலகில் விளங்கு மூரே. 04
    803 விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
    வேணுபுரம் மேக மேய்க்கும்
    இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
    யெழிற்புகலி புறவம் ஏரார்
    வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச்
    சிரபுரம்வன் னஞ்ச முண்டு
    களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா
    மன்னுடலங் காய்ந்தோ னூரே. 05
    804 காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
    கழுமலமாத் தோணிபுரஞ் சீர்
    ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
    இருங்கமலத் தயனூர் இன்பம்
    வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
    தராய்கொச்சை காழி சண்பை
    சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
    பகைகெடுத்தோன் திகழு மூரே. 06
    805 திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
    பிரமனூர் காழி தேசார்
    மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
    வயங்கொச்சை புறவம் விண்ணோர்
    புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
    குருவெம்போர் மகிடற் செற்று
    நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
    பணிந்துலகில் நின்ற வூரே. 07
    806 நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
    புரநிகழும் வேணு மன்றில்
    ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
    சண்பைவளர் புறவ மோடி
    சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்
    தராய்புகலி தேவர் கோனூர்
    வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
    தாங்காக்க மிக்க வூரே. 08
    807 மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
    வஞ்சண்பை காழி கொச்சை
    தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
    பூந்தராய் சிலம்பன் சேரூர்
    மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
    வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்
    ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
    டழித்துகந்த எம்மா னூரே. 09
    808 எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
    கழுமலநற் புகலி யென்றும்
    பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
    தரனூர்நற் றோணிபுரம் போர்க்
    கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
    னூர்தராய் சண்பை காரின்
    மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
    விளங்கியஎம் இறைவ னூரே. 10
    809 இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
    னூர்இமையோர்க் கதிபன் சேரூர்
    குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
    புரங்குணமார் பூந்தராய் நீர்ச்
    சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
    கொச்சைகழு மலந்தே சின்றிப்
    பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
    பரிசறியா அம்மா னூரே. 11
    810 அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
    குருக்கொச்சை புறவ மஞ்சீர்
    மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
    தோணிபுரந் தேவர் கோனூர்
    அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
    வழிமுடக்கு மாவின் பாச்சல்
    தம்மானொன் றியஞான சம்பந்தன்
    தமிழ்கற்போர் தக்கோர் தாமே. 12

    திருச்சிற்றம்பலம்