MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.79 திருவாரூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    855 கவனமாய்ச் சோடையாய் நாவெழாப்
    பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
    சிவனதாட் சிந்தியாப் பேதைமார்
    போலநீ வெள்கி னாயே
    கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந்
    தேறிய காள கண்டன்
    அவனதா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 01
    856 தந்தையார் போயினார் தாயரும்
    போயினார் தாமும் போவார்
    கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார்
    பார்க்கின்றார் கொண்டு போவார்
    எந்தநாள் வாழ்வதற் கேமனம்
    வைத்தியால் ஏழை நெஞ்சே
    அந்தணா ரூர்தொழு துய்யலா
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 02
    857 நிணங்குடர் தோல்நரம் பென்புசேர்
    ஆக்கைதான் நிலாய தன்றால்
    குணங்களார்க் கல்லது குற்றம்நீங்
    காதெனக் குலுங்கி னாயே
    வணங்குவார் வானவர் தானவர்
    வைகலும் மனங்கொ டேத்தும்
    அணங்கனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 03
    858 நீதியால் வாழ்கிலை நாள்செலா
    நின்றன நித்த நோய்கள்
    வாதியா ஆதலால் நாளும்நாள்
    இன்பமே மருவி னாயே
    சாதியார் கின்னரர் தருமனும்
    வருணனும் ஏத்து முக்கண்
    ஆதியா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 04
    859 பிறவியால் வருவன கேடுள
    ஆதலாற் பெரிய இன்பத்
    துறவியார்க் கல்லது துன்பம்நீங்
    காதெனத் தூங்கி னாயே
    மறவல்நீ மார்க்கமே நண்ணினாய்
    தீர்த்தநீர் மல்கு சென்னி
    அறவனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 05
    860 செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த்
    தேரையாய்ச் சிறு பறவை
    கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற
    லாமென்று கருதி னாயே
    முடிகளால் வானவர் முன்பணிந்
    தன்பரா யேத்து முக்கண்
    அடிகளா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 06
    861 ஏறுமால் யானையே சிவிகையந்
    தளகமீச் சேர்ப்பி வட்டில்
    மாறிவா ழுடம்பினார் படுவதோர்
    நடலைக்கு மயங்கி னாயே
    மாறிலா வனமுலை மங்கையோர்
    பங்கினர் மதியம் வைத்த
    ஆறனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 07
    862 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண்
    சுவரெறிந் திதுநம் இல்லம்
    புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல்
    லாமையான் முகடு கொண்டு
    முன்பெலாம் ஒன்பது வாய்தலார்
    குரம்பையின் மூழ்கி டாதே
    அன்பனா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 08
    863 தந்தைதாய் தன்னுடன் தோன்றினார்
    புத்திரர் தார மென்னும்
    பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக்
    கில்லெனப் பற்றி னாயே
    வெந்தநீ றாடியார் ஆதியார்
    சோதியார் வேத கீதர்
    எந்தையா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 09
    864 நெடியமால் பிரமனும் நீண்டுமண்
    ணிடந்தின்னம் நேடிக் காணாப்
    படியனார் பவளம்போல் உருவனார்
    பனிவளர் மலையாள் பாக
    வடிவனார் மதிபொதி சடையனார்
    மணியணி கண்டத் தெண்டோ ள்
    அடிகளா ரூர்தொழு துய்யலாம்
    மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. 10
    865 பல்லிதழ் மாதவி அல்லிவண்
    டியாழ்செயுங் காழி யூரன்
    நல்லவே நல்லவே சொல்லிய
    ஞானசம் பந்தன் ஆரூர்
    எல்லியம் போதெரி யாடுமெம்
    மீசனை யேத்து பாடல்
    சொல்லவே வல்லவர் தீதிலார்
    ஓதநீர் வைய கத்தே. 11

    திருச்சிற்றம்பலம்