MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.98 திருத்துருத்தி - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1059 வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலங்கள் உந்திவந்
    திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
    கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
    உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே. 01
    1060 அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளந்
    தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
    கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
    எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே. 02
    1061 கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
    சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
    பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்
    கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ. 03
    1062 கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
    அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்
    ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்
    இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே. 04
    1063 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
    மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
    பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்
    டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே. 05
    1064 வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
    துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
    மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூ
    வெயிற்கெதிர்ந் தோரம்பினால் எரித்தவில்லி யல்லையே. 06
    1065 கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
    துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
    அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
    மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே. 07
    1066 சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
    இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்
    கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
    அடற்பட அடுக்கலில் லடர்த்தஅண்ணல் அல்லையே. 08
    1067 களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்
    வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
    துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
    உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே. 09
    1068 புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
    உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினந்
    துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
    பித்தர்பித் தனைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே. 10
    1069 கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
    சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்
    பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
    குற்றமுற்று மின்மையின் குணங்கள்வந்து கூடுமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதேசுவரர், தேவியார் - முகிழாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்