MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.99 திருக்கோடிகா - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1070 இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்
    பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
    மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
    கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. 01
    1071 அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்
    நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
    வில்லையன்ன வாணுதல் வெள்வளையோர் பாகமாங்
    கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே. 02
    1072 துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
    தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
    அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
    கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே. 03
    1073 பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
    உண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோ
    மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதோர் பாகமாக்
    கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே. 04
    1074 முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
    தின்னநீரி டும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
    பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
    கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே. 05
    1075 ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
    பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்
    காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
    கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே. 06
    1076 ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்
    மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
    பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
    கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே. 07
    1077 மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
    பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
    வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
    குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே. 08
    1078 மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
    செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
    வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
    கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே. 09
    1079 தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
    பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
    விட்டபுன் சடையினான் மேதகு முழவொடுங்
    கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே. 10
    1080 கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
    செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
    அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
    பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கோடீசுவரர், தேவியார் - வடிவாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்