MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.113 சீகாழி
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1223 பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்
    அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
    இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்
    கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே. 01
    1224 மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
    அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
    புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
    கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே. 02
    1225 கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்
    மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
    நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்
    கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே. 03
    1226 குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
    பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
    மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
    கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே. 04
    1227 விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
    எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
    பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
    கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே. 05
    1228 தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
    பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
    கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
    காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே. 06
    1229 மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
    தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
    இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
    கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே. 07
    1230 முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
    அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
    தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
    கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே. 08
    1231 பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
    மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்
    தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
    காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே. 09
    1232 உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்
    முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்
    மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதர
    கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே. 10
    1233 கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
    உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறுதலாற்
    பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
    விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே. 11

    திருச்சிற்றம்பலம்