MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.118 திருத்திலதைப்பதி - மதிமுத்தம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1278 பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
    அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
    கொடிகளோங்கிக் குலவும் விழவார்தில தைப்பதி
    வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும்மதி முத்தமே. 01
    1279 தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
    கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
    தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
    வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைமதி முத்தமே. 02
    1280 அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
    கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
    திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்ததில தைப்பதி
    மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும்மதி முத்தமே. 03
    1281 கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
    வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர் தன்னிடஞ்
    செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்ததில தைப்பதி
    மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார்மதி முத்தமே. 04
    1282 புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
    பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
    விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
    மரவம்மவ்வன் மலருந் திலதைமதி முத்தமே. 05
    1283 விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
    பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
    தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி
    மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே. 06
    1284 ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
    கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
    தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார்தில தைப்பதி
    மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தமதி முத்தமே. 07
    1285 கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
    எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
    புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
    மடுத்துமந்தி யுகளுந் திலதைமதி முத்தமே. 08
    1286 படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
    இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
    திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
    மடங்கல்வந்து வழிபாடு செய்யும்மதி முத்தமே. 09
    1287 புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
    பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
    பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந்தில தைப்பதி
    மத்தயானை வழிபாடு செய்யும்மதி முத்தமே. 10
    1288 மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
    கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
    பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
    சிந்தைசெய்வார் சிவன்சே வடிசேர்வது திண்ணமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மதிமுத்தநாதேசுவரர், தேவியார் - பொற்கொடியம்மை.

    திருச்சிற்றம்பலம்