MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.10 திரு அண்ணாமலை
    பண் - நட்டபாடை

    97 உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
    பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
    மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
    அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே. 1.10.1
    98 தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
    தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
    ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
    பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே. 1.10.2
    99 பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
    சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
    ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
    காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே. 1.10.3
    100 உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
    எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
    முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
    அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே. 1.10.4
    101 மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
    அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
    உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
    குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே. 1.10.5
    102 பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
    பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
    கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
    உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே. 1.10.6
    103 கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
    நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
    எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
    அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே. 1.10.7
    104 ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
    பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
    வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
    அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே. 1.10.8
    105 விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
    கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
    அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
    தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே. 1.10.9
    106 வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
    மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
    ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
    கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே. 1.10.10
    107 வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
    அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
    கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
    சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. 1.10.11

    இது நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,
    தேவியார் - உண்ணாமுலையம்மை