MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.13 திருவியலூர்
    பண் - நட்டபாடை

    130 குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
    பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
    அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
    விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. 1.13.1
    131 ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
    ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
    மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
    வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 1.13.2
    132 செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
    பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
    உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்
    விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 1.13.3
    133 அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
    மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
    கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
    மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 1.13.4
    134 எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
    பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
    கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
    விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. 1.13.5
    135 வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
    திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
    அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
    விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே. 1.13.6
    136 மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
    ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
    தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
    மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. 1.13.7
    137 பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
    கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
    சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
    விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.8
    138 வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
    அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
    உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
    விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.9
    139 தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
    பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
    கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
    விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. 1.13.10
    140 விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
    தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
    துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
    விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே. 1.13.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;
    தேவியார் - சவுந்தரநாயகியம்மை;
    சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.