MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.18 திருநின்றியூர்
    பண் - நட்டபாடை

    185 சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
    பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
    காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
    நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.
    () சூலப்படை என்றும் பாடம்.
    () சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம். 1.18.1
    186 அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
    நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
    நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
    பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.
    () நயந்தானா என்றும் பாடம். 1.18.2
    187 பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
    அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
    நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
    உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 1.18.3
    188 பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
    ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
    தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
    ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே. 1.18.4
    189 குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
    நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
    அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்
    கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.
    () எய்தி என்றும் பாடம். 1.18.5
    190 மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
    சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
    வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
    யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே. 1.18.6
    191 பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
    பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
    சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
    நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே. 1.18.7
    இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.18.8
    192 நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
    அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
    நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்
    செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 1.18.9
    193 நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
    அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
    நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
    மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. 1.18.10
    194 குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
    நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
    நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
    குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. 1.18.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,
    தேவியார் - உலகநாயகியம்மை.