MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.26 திருப்புத்தூர்
    பண் - தக்கராகம்

    272 வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
    திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
    கங்கை தங்கு முடியா ரவர்போலும்
    எங்கள் உச்சி உறையும் இறையாரே. 1.26.1
    273 வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
    தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
    ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்
    ஏன முள்ளும் எயிறும் புனைவாரே. 1.26.2
    274 பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
    தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
    ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்
    தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 1.26.3
    275 நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
    தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
    ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
    ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.4
    276 இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்
    திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
    பசை விளங்கப் படித்தா ரவர்போலும்
    வசை விளங்கும் வடிசேர் நுதலாரே. 1.26.5
    277 வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
    தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
    ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்
    வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 1.26.6
    278 நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்
    செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
    தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்
    மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே. 1.26.7
    279 கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்
    திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
    இருக்க வல்ல இறைவ ரவர்போலும்
    அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே. 1.26.8
    280 மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
    தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
    பெருகி வாழும் பெருமா னவன்போலும்
    பிரமன் மாலும் அறியாப் பெரியோனே. 1.26.9
    281 கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
    தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்
    ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்
    ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. 1.26.10
    282 நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
    செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்
    சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
    அல்லல் தீரும் அவலம் அடையாவே. 1.26.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்