MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்
    பண் - தக்கராகம்

    305 ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
    நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
    சீரு லாவு மறையோர் நறையூரிற்
    சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.1
    306 காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
    ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
    வீடு மாக மறையோர் நறையூரில்
    நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 1.29.2
    307 கல்வி யாளர் கனக மழல்மேனி
    புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
    மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
    செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 1.29.3
    308 நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
    ஆட வல்ல அடிக ளிடமாகும்
    பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
    சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.4
    309 உம்ப ராலும் உலகின் னவராலும்
    தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
    நண்பு லாவு மறையோர் நறையூரிற்
    செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.5
    310 கூரு லாவு படையான் விடையேறிப்
    போரு லாவு மழுவான் அனலாடி
    பேரு லாவு பெருமான் நறையூரிற்
    சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 1.29.6
    311 அன்றி நின்ற அவுணர் புரமெய்த
    வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
    மன்றில் வாச மணமார் நறையூரிற்
    சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
    () அன்றி நின்ற - பகைத்து நின்ற 1.29.7
    312 அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
    நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
    பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
    திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 1.29.8
    313 ஆழி யானும் அலரின் உறைவானும்
    ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
    சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
    நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 1.29.9
    314 மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
    கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
    உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
    செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. 1.29.10
    315 மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
    சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
    அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
    பத்தும் பாடப் பறையும் பாவமே. 1.29.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்