MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.34 சீகாழி
    பண் - தக்கராகம்

    360 அடலே றமருங் கொடியண்ணல்
    மடலார் குழலா ளொடுமன்னுங்
    கடலார் புடைசூழ் தருகாழி
    தொடர்வா ரவர்தூ நெறியாரே. 1.34.1
    361 திரையார் புனல்சூ டியசெல்வன்
    வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
    கரையார் புனல்சூழ் தருகாழி
    நிரையார் மலர்தூ வுமினின்றே. 1.34.2
    362 இடியார் குரலே றுடையெந்தை
    துடியா ரிடையா ளொடுதுன்னுங்
    கடியார் பொழில்சூழ் தருகாழி
    அடியார் அறியார் அவலம்மே. 1.34.3
    363 ஒளியார் விடமுண் டவொருவன்
    அளியார் குழல்மங் கையொடன்பாய்
    களியார் பொழில்சூழ் தருகாழி
    எளிதாம் அதுகண் டவரின்பே. 1.34.4
    364 பனியார் மலரார் தருபாதன்
    முனிதா னுமையோ டுமுயங்கி
    கனியார் பொழில்சூழ் தருகாழி
    இனிதாம் அதுகண் டவரீடே. 1.34.5
    365 கொலையார் தருகூற் றமுதைத்து
    மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
    கலையார் தொழுதேத் தியகாழி
    தலையால் தொழுவார் தலையாரே. 1.34.6
    366 திருவார் சிலையால் எயிலெய்து
    உருவார் உமையோ டுடனானான்
    கருவார் பொழில்சூழ் தருகாழி
    மருவா தவர்வான் மருவாரே. 1.34.7
    367 அரக்கன் வலியொல் கஅடர்த்து
    வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
    சுரக்கும் புனல்சூழ் தருகாழி
    நிரக்கும் மலர்தூ வுநினைந்தே. 1.34.8
    368 இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
    உருவிற் பெரியா ளொடுசேருங்
    கருநற் பரவை கமழ்காழி
    மருவப் பிரியும் வினைமாய்ந்தே. 1.34.9
    369 சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
    அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
    கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
    சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே. 1.34.10
    370 நலமா கியஞான சம்பந்தன்
    கலமார் கடல்சூழ் தருகாழி
    நிலையா கநினைந் தவர்பாடல்
    வலரா னவர்வான் அடைவாரே. 1.34.11

    திருச்சிற்றம்பலம்