MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.37 திருப்பனையூர்
    பண் - தக்கராகம்

    393 அரவச் சடைமேல் மதிமத்தம்
    விரவிப் பொலிகின் றவனூராம்
    நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
    பரவிப் பொலியும் பனையூரே. 1.37.1
    394 எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
    உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
    கண்ணின் றெழுசோ லையில்வண்டு
    பண்ணின் றொலிசெய் பனையூரே. 1.37.2
    395 அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
    மலரும் பிறையொன் றுடையானூர்
    சிலரென் றுமிருந் தடிபேணப்
    பலரும் பரவும் பனையூரே. 1.37.3
    396 இடியார் கடல்நஞ் சமுதுண்டு
    பொடியா டியமே னியினானூர்
    அடியார் தொழமன் னவரேத்தப்
    படியார் பணியும் பனையூரே. 1.37.4
    397 அறையார் கழல்மே லரவாட
    இறையார் பலிதேர்ந் தவனூராம்
    பொறையார் மிகுசீர் விழமல்கப்
    பறையா ரொலிசெய் பனையூரே. 1.37.5
    398 அணியார் தொழவல் லவரேத்த
    மணியார் மிடறொன் றுடையானூர்
    தணியார் மலர்கொண் டிருபோதும்
    பணிவார் பயிலும் பனையூரே. 1.37.6
    399 அடையா தவர்மூ வெயில்சீறும்
    விடையான் விறலார் கரியின்தோல்
    ()உடையா னவனெண் பலபூதப்
    படையா னவனூர் பனையூரே.
    () உடையா னவனொண் பலபூத என்றும் பாடம். 1.37.7
    400 இலகும் முடிபத் துடையானை
    அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
    உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
    பலகண் டவனூர் பனையூரே. 1.37.8
    401 வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
    சிரமுன் னடிதா ழவணங்கும்
    பிரமன் னொடுமா லறியாத
    பரமன் னுறையும் பனையூரே. 1.37.9
    402 அழிவல் லமண ரொடுதேரர்
    மொழிவல் லனசொல் லியபோதும்
    இழிவில் லதொர்செம் மையினானூர்
    பழியில் லவர்சேர் பனையூரே.
    () அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம். 1.37.10
    403 பாரார் விடையான் பனையூர்மேல்
    சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
    ஆரா தசொன்மா லைகள்பத்தும்
    ஊரூர் நினைவா ருயர்வாரே.
    () விடையார் என்றும் பாடம். 1.37.11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை

    திருச்சிற்றம்பலம்