MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.38 திருமயிலாடுதுறை
    பண் - தக்கராகம்

    404 கரவின் றிநன்மா மலர்கொண்டே
    இரவும் பகலுந் தொழுவார்கள்
    சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
    வரமா மயிலா டுதுறையே. 1.38.1
    405 உரவெங் கரியின் னுரிபோர்த்த
    பரமன் னுறையும் பதியென்பர்
    குரவஞ் சுரபுன் னையும்வன்னி
    மருவும் மயிலா டுதுறையே. 1.38.2
    406 ஊனத் திருள்நீங் கிடவேண்டில்
    ஞானப் பொருள்கொண் டடிபேணுந்
    தேனொத் தினியா னமருஞ்சேர்
    வானம் மயிலா டுதுறையே. 1.38.3
    407 அஞ்சொண் புலனும் மவைசெற்ற
    மஞ்சன் மயிலா டுதுறையை
    நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்
    துஞ்சும் பிணியா யினதானே. 1.38.4
    408 ()தணியார் மதிசெஞ் சடையான்றன்
    அணியார்ந் தவருக் கருளென்றும்
    பிணியா யினதீர்த் தருள்செய்யும்
    மணியான் மயிலா டுதுறையே.
    () கணியார் என்றும் பாடம். 1.38.5
    409 தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
    கண்டு துதிசெய் பவனூராம்
    பண்டும் பலவே தியரோத
    வண்டார் மயிலா டுதுறையே. 1.38.6
    410 அணங்கோ டொருபா கமமர்ந்து
    இணங்கி யருள்செய் தவனூராம்
    நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
    வணங்கும் மயிலா டுதுறையே. 1.38.7
    411 சிரங்கை யினிலேந் தியிரந்த
    பரங்கொள் பரமேட் டிவரையால்
    அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
    வரங்கொள் மயிலா டுதுறையே. 1.38.8
    412 ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்
    கோலத் தயனும் மறியாத
    சீலத் தவனூர் சிலர்கூடி
    மாலைத் தீர்மயிலா டுதுறையே. 1.38.9
    413 நின்றுண் சமணும் நெடுந்தேரர்
    ஒன்றும் மறியா மையுயர்ந்த
    வென்றி யருளா னவனூராம்
    மன்றன் மயிலா டுதுறையே. 1.38.10
    414 நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
    மயல்தீர் மயிலா டுதுறைமேல்
    செயலா லுரைசெய் தனபத்தும்
    உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 1.38.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்