MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    1.00 பாயிரம்


    001 உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். 1.0.1
    002 ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
    தான் அடைந்த உறுதியைச் சாருமால்;
    தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
    மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ. 1.0.2
    003 எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
    நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
    தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
    கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். 1.0.3
    004 மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
    துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
    பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
    விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே. 1.0.4
    005 அளவிலாத பெருமையராகிய
    அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
    அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
    அளவிலாசை துரைப்ப அறைகுவேன். 1.0.5
    006 தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
    பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
    பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
    ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன். 1.0.6
    007 செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
    அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
    இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
    மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால். 1.0.7
    008 மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
    சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
    தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
    ஆய சீர் அநபாயன் அரசவை. 1.0.8
    009 அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
    தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
    வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
    பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே. 1.0.9
    010 இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
    தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
    பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
    செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம். 1.0.10


    1. திருமலைச் சருக்கம்

Goto Main book