MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் (4163 - 4168)


    திருச்சிற்றம்பலம்

    4163 ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன்
    எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
    காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த
    கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம்
    ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி
    ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்
    மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது
    நம் இரு வினைகள் கழிவதாக 11.6.1
    4164 அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து
    ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
    இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று
    அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
    உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த
    சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
    எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு
    இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் 11.6.2
    4165 ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு
    அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
    நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம்
    உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
    சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம்
    அநு கற்பம் தில்லை மன்றுள்
    வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக்
    கூத்தர் மொழி வாய்மை யாலே 11.6.3
    4166 அடவி படும் அங்கியினில் வெந்த நீறும்
    ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
    இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி
    கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
    உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை
    திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி
    மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி
    தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும் 11.6.4
    4167 இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே
    இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர்
    அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை
    அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி
    முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும்
    மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி
    நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர்
    அடியார் அணிவர் நன்மையாலே 11.6.5
    4168 சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின்
    நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
    நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
    நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில்
    பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி
    அதளின் உடையானைப் போற்றி நீற்றை
    ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர்
    முழுவதும் மெய் அணிவர் அன்றே 11.6.6
    திருச்சிற்றம்பலம்


Goto Main book