MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    6.5 மூர்க்க நாயனார் புராணம் (3618 - 3629)


    திருச்சிற்றம்பலம்

    3618 மன்னிப் பெருகும் பெரும் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும்
    நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி
    அன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கின் இடை
    மின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவில் காடு வேற்காடு 6.5.1
    3619 செம் பொன் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றை
    நம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு
    இம்பர் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்
    தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார் 6.5.2
    3620 கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கி
    ஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்
    காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும்
    நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார் 6.5.3
    3621 தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து
    மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
    ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக
    ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார் 6.5.4
    3622 இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்து அருள
    முன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்
    மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றே
    அன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார் 6.5.5
    3623 அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபால் அடியார் தங்கட்கு அமுத ஆக்க
    எங்கும் காணா வகை தோன்ற இலம் பாடு எய்தி இருந்துஅயர்வார்
    தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால்
    பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார் 6.5.6
    3624 பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்
    உற்ற அன்பால் ஦ச்ன்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்து
    கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதாரூர்
    செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில் 6.5.7
    3625 இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப்
    பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே
    உருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர்
    அருளாகவே கொண்டு அமுது செய்வித்து இன்புறுவார் 6.5.8
    3626 முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப்
    பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்
    சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி
    நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால் நிலத்தில் 6.5.9
    3627 சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்
    தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்
    காதல் உடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்தி
    ஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள் 6.5.10
    3628 நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும்
    ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலே
    ஏதங்கள் போய் அகல இவ் உலகைவிட்டு அதன்பின்
    பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார் 6.5.11
    3629 வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்
    அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்
    நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்
    சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம் 6.5.12
    திருச்சிற்றம்பலம்


Goto Main book