MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7.5 கணநாத நாயனார் புராணம் (3923 - 3929)


    திருச்சிற்றம்பலம்

    3923 ஆழி மாநிலத்து அகிலம் ஈன்று அளித்தவள் திருமுலை அமுதுண்ட
    வாழி ஞான சம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு இல்லா
    ஊழி மாகடல் வெள்ளத்து மிதந்து உலகினுக்கு ஒரு முதலாய்
    காழி மா நகர் திரு மறையவர் குலக் காவலர் கணநாதர் 7.5.1
    3924 ஆய அன்பர் தாம் அணிமதில் சண்பையின் அமர் பெரும் திருத்தோணி
    நாயனார்க்கு நல் திருப்பணியாயின நாளும் அன்பொடு செய்து
    மேய அத் திருத் தொண்டினில் விளங்குவார் விரும்பி வந்து அணைவார்க்குத்
    தூய கைத் திருத் தொண்டினில் அவர் தமைத் துறை தொறும் பயில்விப்பார் 7.5.2
    3925 நல்ல நந்தவனப் பணி செய்பவர் நறுந்துணர் மலர் கொய்வோர்
    பல் பணித் தொடை புனைபவர் கொணர் திரு மஞ்சனப் பணிக்கு உள்ளோர்
    அல்லும் நன் பகலும் திரு அலகிட்டு திரு மெழுக்கு அமைப்போர்
    எல்லையில் விளக்கு எரிப்பவர் திரு முறை எழுதுவோர் வாசிப்போர் 7.5.3
    3926 இனைய பஃதிருப் பணிகளில் அணைந்தவர்க்கு ஏற்ற அத் திருத்தொண்டின்
    வினை விளங்கிட வேண்டிய குறை எலாம் முடித்து மேவிடச் செய்தே
    அனைய அத்திறம் புரிதலில் தொண்டரை ஆக்கி அன்புறு வாய்மை
    மனை அறம் புரிந்து அடியவர்க்கு இன்பு உற வழிபடும் தொழில் மிக்கார் 7.5.4
    3927 இப் பெரும் சிறப்பு எய்திய தொண்டர் தாம் ஏறு சீர் வளர் காழி
    மெய்ப் பெரும் திரு ஞான போனகர் கழல் மேவிய விருப்பாலே
    முப் பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும்
    ஒப்பில் காதல் கூர் உளங்களி சிறந்திட ஒழுகினார் வழுவாமல் 7.5.5
    3928 ஆன தொண்டினில் அமர்ந்த பேர் அன்பரும் அகல் இடத்தினில் என்றும்
    ஞானம் உண்டவர் புண்டரீகக் கழல் அருச்சனை நலம் பெற்றுத்
    தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால்வரை எய்தி
    மான நற்பெரும் கணங்களுக்கு நாதராம் வழித் தொண்டின் நிலை பெற்றார் 7.5.6
    3929 உலகம் உய்ய நஞ்சுண்டவர் தொண்டினில் உறுதி மெய் உணர்வு எய்தி
    அலகில் தொண்டருக்கு அறிவு அளித்தவர் திறம் அவனியின் மிசை ஆக்கும்
    மலர் பெரும் புகழ்ப் புகலியில் வரும் கண நாதனார் கழல் வாழ்த்தி
    குலவு நீற்று வண் கூற்றுவனார் திறம் கொள்கையின் மொழிகின்றோம் 7.5.7
    திருச்சிற்றம்பலம்


Goto Main book