MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    9. 1 கணம்புல்ல நாயனார் புராணம் (4055-4062)


    திருச்சிற்றம்பலம்

    4055 திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி
    பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்
    வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
    இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி 9.1.1
    4056 அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த
    எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்
    ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்
    மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் 9.1.2
    4057 தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
    ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து
    நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத்
    தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார் 9.1.3
    4058 தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
    அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த
    வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க
    இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில் 9.1.4
    4059 ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி
    காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து
    மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித்
    தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார் 9.1.5
    4060 இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள்
    மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
    எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார்
    அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார் 9.1.6
    4061 முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்
    மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான
    அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை
    என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் 9.1.7
    4062 தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப்
    பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு
    மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து
    எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் 9.1.8
    4063 மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப்
    பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி
    வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில்
    காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் 9.1.9
    திருச்சிற்றம்பலம்


Goto Main book