MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    9.5 முனையடுவார் நாயனார் புராணம் (4089- 4095)


    திருச்சிற்றம்பலம்

    4089 மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு
    நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழுந்தேன்
    ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
    சேறு நறுவாசம் கமழும் செல்வ நீடூர் திருநீடூர் 9.5.1
    4090 விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்
    களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும்
    உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் நள்ளார் முனை எறிந்த
    வளம் கொண்டு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார் 9.5.2
    4091 மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர் வந்து தம்பால் மா நிதியம்
    ஆற்றும் பரிசு பேசினால் அதன் நடுவு நிலை வைத்து
    கூற்றும் ஒதுங்கும் ஆள்வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து
    போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார் 9.5.3
    4092 இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
    சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
    கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனியுள்ளுறுத்த கலந்து அளித்து
    மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார் 9.5.4
    4093 மற்றிந் நிலை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி
    உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால்
    பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
    முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன்னுடையார் 9.5.5
    4094 யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம்
    மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூம் கமலக் கழல் வணங்கி
    தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செம்கோல் முறை புரியும்
    காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டுரைப்பாம் 9.5.6
    4095 சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
    செறிவுண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
    குறியுண்டு ஒன்றாகிலும் குறை ஒன்று இல்லோம் நிறை கருணையினால்
    வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க
    பறியுண்டவர் எம்பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே 9.5.7
    திருச்சிற்றம்பலம்
    கறைக் கண்டன் சருக்கம் முற்றிற்று.

Goto Main book